பருவ மழை காலம்

கருமுகில் சூழக் கருத்தது வானம்
கருமுகில் கீறி வீசியது மின்னல்
இடியின் முழக்கம் எதிரொலி கேட்டு
வெடித்துச் சிதறின நீர்த்துளிகள்

பெருகிய வெள்ளம் சீறிப் பாய்ந்து
வருவதைக் கண்டு வற்றி யிருந்த
கிணறு குளங்கள் நிறைந்திடக் கண்டு
நிமிர்ந்தெழுந்தன பச்சைப் புற்கள்

நீர்நிலை யெல்லாம் நிறைந்து வழிந்திட
நாட்டிய மாடின தாமரைக் கொடிகள்
உழுதொழில் செய்து உயிர்கள் காக்கும்
உழவர் விரைந்தார் வயல்

எழுதியவர் : (16-Nov-13, 9:14 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 125

மேலே