சாதனை வீரர் சச்சின்
நாளைய பொழுது நல்ல பொழுதாக
இருக்குமா??
என்ன செய்தாலும் முன்னேற
முடியவில்லையே
எத்தனை முறைதான் முயற்சி
செய்வது???
அலுத்து சலித்து
வெறுத்து வேதனைப்பட்டு
எதையும் எதிர் கொள்வதைவிட
தன்னம்பிக்கை, விடா முயற்சி,
சிரித்த முகம்
என்ற பாணியில்
முயன்று பார்த்தால்
அது கை காட்டும் இடம்
சச்சின்....
இப்போது முயன்று பாருங்கள்
நிச்சயம் வெற்றி உறுதி
பிறந்த அன்றே இறப்பை எதிர்கொள்ளும்
ஈசலும் வாழ்கிறது....
மனிதன் கால்பட்டால்
இறக்கும் எறும்பும்
வாழ்க்கையை ருசிக்கிறது
எல்லாம் நம்பிக்கை
முயற்சியின் கைகளில் மட்டுமே
உழைத்தால் உண்டு பலன்
சாதனை வீரர் சச்சின் பாணியில்...........