முதல் கனவே
கரடு முரடான வாழ்விலே
பூக்களை தூவிட்ட பூவையே..
பூட்டி வைத்த மனதுக்கு
திறவுகோல் போட்ட திரவியமே..
கனலாய் இருந்த கண்ணுக்கு
கனவுகள் தந்தவளே ..
துக்கம் நிறைந்த தூக்கத்தில்
தூசி துடைத்தவளே..
ஏக்கம் நிறைந்த நெஞ்சுக்குள்
தாக்கம் தந்தவளே ..
அடங்காத என்னை
அன்பால் கட்டிபோட்ட
அற்புதமே..
கனவுக்குள் இடம் தந்து ,
கடமைகள் எனக்கென பல தந்து ,
சிந்து பாட வைத்த சிறகோவியமே..
வேர்த்து கொட்டும் வேளையில்
விசிறி தந்த தென்றலே..
ஆணிவேராய்
நெஞ்சத்தில் அமர்ந்தது உன் நினைவே ,
ஆயிரம் கவிதைகள் உனக்காக
என் முதல் கனவே..