உன் நட்பின் சுகம்
உள்ளம் கலங்கும் போதும்
உன்னை நினைத்தால்
உள்ளமது குதுகளிக்கும்..
எத்தனை இனிமை
என்னவளே உன் நட்பினிலே...
தவமின்றி நான் பெற்ற வரம் நீ..
வசந்தம் வந்தது உன்னாலே,
வலிகள் மறைந்தது உன் அன்பாலே...
அன்பால் சிறைவைத்தாய் ,
ஆனந்தத்தை அள்ளி தந்தாய்..
ஆருயிரானவளே,
ஆகாயம் ஆனாய் என் வாழ்வினிலே..
இவ்வுலகம் இருளும் போதும்
என் இதயத்துடிப்பு முடிந்து
ஆன்மா பிரியும் போதும்
இனியவளே நீ வேண்டும் ..
இமயமே அடிமையாகுமடி!
உன் நட்பு கிட்டினால்...
இதயமது இனிமையாகுமடி
உன்னை நினைத்தால்...