முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்

கடலும் அலையும்
பயமுறுத்தியது
நீச்சல் கற்றுக்கொள்ள
முடிவெடுத்தபோது...!
கடலே தெரியாமல்
வாழ்ந்துவிட்டு
எப்படிக் கற்றுக்கொள்வது
நீச்சலை வெகுவிரைவில்..!
கடலுள் இறங்கி
பயம் தெளிந்தபின்
பயிற்சியுடன் விரைவில்
கற்றுக்கொண்டேன் நீச்சலை..!
போட்டி வைத்து அதிலே
முன்னணியில் வந்தவுடன்
எல்லோரும் அதிர்ந்தனர்
எப்படி உன்னால் முடிந்ததென்று..!
என்னுடன் போட்டியிட்டவரை
திரும்பி நான் பார்க்கவில்லை
இலக்கு மட்டுமே என் மனதில்
அதுவே என் வெற்றியாய்........!
மீன் குஞ்சுக்கு நீச்சலைக்
கற்றுக் கொடுக்கத் தேவையில்லை
அதில் சாதனையென்று எதுவுமில்லை
தன்னம்பிக்கையின் வெற்றியே வெற்றியாய்..!!!