என் நிம்மதி
என் நிம்மதி
நீ கண்மணி
என் உயிர் எங்கிலும் உன் சத்தம்
நான் கட்டிய
காதல் கோட்டையது நொருங்குவதேன்
என் கண்ணீர்
துளிகள் பட்டு கரைந்து போவது ஏன்
ஒரே குடைக்குள்
நாம் இரு துளிகள்
மழைத்துளிகள்
மேல் பூவாய் தூவ
இன்று நீ இன்றி
என் உயிர் இன்றி
கண்ணீர் துளிகளில்
ஒரு தடம் செய்தேன்
என் வலிபுரிந்தால்
மனம் இருந்தால்
என் கண்ணீர் துளிகளில்
வந்து கலந்துவிடு
இரு பாதியடி
ஒரு பாதையில்
என் உடல் நடக்குது
மறு பாதையில்
என் உயிர் துடிக்குது
விழும் வானத்தை
குடையாகவே
உனக்காகவே
நான் தாங்குவேன்
என் விழியோரத்தில்
வரும் நீர்த்துளி
அதை துடைக்கவே
உன் கரங்களை கேட்கிறேன்
என் ஜென்மமே
ஆகும் துன்பமே
உன்னை பிரிந்ததால்
நான் புரிந்துக்கொண்டேன்
வந்து பேசடி
என்னை ஏசடி
உனக்காக நான் காத்திருப்பேன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)