வேதம்
துன்பம் முடியும்
உன்னால் முடியுமென்று
நம்பிக்கை கொண்டால்..
சிகரம் பார்த்து
பாதை அமைத்து
நம்பிக்கை சிறகால் தொட்டு வா
வெற்றி இலக்கு உன்னை தொடர்ந்து வரும்..
முயன்று நீயும்
முன்னேறி வா
உலகம் உன் பின்னால் வரும்..
காலம் போனால் திரும்பாது,
காயம் நினைத்து வருந்தாதிரு..
விழுந்துவிட்டோம் !
என் அழுவதை விடு,
எழுந்துவிட்டோம்!
முயற்சியாலே
என் பெருமிதம் கொள்..
துயிலும் காலம்
ஒருநாள் வரும் ,
துவண்டு துயரில் விழுவதை விடு..
துணிந்து ,எழுந்து
வாழ்வினில் முடிவினை எடு...
எண்ணத்தை மாற்றி நடைபோடு
முன்னேற்றம் வரும் உன் பின்னோடு..
உன்னை நம்பி நீயிருந்தால்
முயற்சி விதையில்
நீ முளைந்திருந்தால்,
அலட்சியம் விடுத்திடு,
லட்சியத்தில் முனைந்திடு,
தோல்வி உன்னை விடுத்தோடும்!
வெற்றிக்கு அதுவே வழிபோடும்...
மெய்யடக்கம் காணும் வரை
தன்னடக்கம் பேணும் ஒருவரையே
உலகம் மதிக்கும்
உள்ளும் வரை ஊரார் உள்ளம் நினைக்கும்...
ஆயுள் முடியும் வரை
உன்னால் முயன்ற வரை
இயலாதோருக்கு
இரக்கம் காட்டு..
ஊனமுற்றோருக்கும் ,
கல்வி பயிலா ஏழை குழந்தைக்கும்
உதவிக்கரம் நீட்டு..
சாதி மத பேதம்
பார்ப்பதை நிறுத்து
இந்தியன் எனும்
வேதம் மதித்து
மனிதநேயத்தின் மகிமை உணர்த்து,
இவ்வுலகினிலே,
இந்திய தேசத்தின் பெருமை உயர்த்து...