ஒரு குயிலின் குரல்--தூய்மை பேணல்

காலையும் மாலையும் காயம் கழுவிட
வேலையும் இலையே நோய்.
ஒவ்வா தெதுவும் அசிங்கம் அதுவுமே
உன்னுள் ளிருப்பதும் காண்.
ஒப்புரவதன் துப்புரவுப் பேண வுமிப்புவி
ஒப்பது சொர்க்கமே தான்.
சப்பரம் போன்றும் சரீர அழகும்
துப்புரவாலே தானே வரும்.
அழியாக் கொடையதுக் காப்பது பேணல்
மயிரன்னத் தூய்மை உலகு
அசைவம் தவிர்த்தும் அளவதும் உண்டும்
இசைந்தும் இயற்கையே வாழ்.
பசித்துடன் காய்கனிச் சோறும் உழைத்துண்டும்
நசித்தும் புசித்தாம் வாழ்.
வியர்க்க வருத்தி அயர்க்கவும் துஞ்சி
தயவிரவாம் திருத்த ஓயல்.
பகலி லுறக்கம் அகலில் விளக்கம்
அதன் பயன் போல்.
ஒருவேளைத் தூக்கம் இருவேளைப் பயிற்சி
மூவேளை உண்ணல் நலம்.
கொ.பெ.பி.அய்யா.
குறிப்பு:-
அளவோடு உண்டு வளமோடு வாழ்ந்து
நலம் நாடப் பயிற்ச்சி மேற்கொண்டு
சுகமாக வாழ வாழ்த்துகிறேன்.
நன்றி!