வானம் வசப்படும்
உடலில் குருதியோட
நமக்குள் உயிரோடும்!
உலகில் எண்ணமோட
உயிர்களின் வாழ்க்கையோடும்!
எண்ணங்களின் வண்ணம்
வாழ்வில் கலக்கும்!
எண்ணங்கள் சிறப்பாக
வாழ்வு சிறப்பாகும்!
நல்ல எண்ணங்களை
நாளும் வளர்ப்போம்!
நல்லவை மலரும்
நாளும் மகிழ்வோம்!
வளர்க்கும் எண்ணங்களால்
வளரும் நல்லவை
வளர்க்கும் நல்லவைகளால்
வானம் வசப்படும்!
---
"எண்ணியர் எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின் " - " திருவள்ளுவர் "