பெண்மை

கொங்குதமிழில்
கொச்சை மொழியில்
குலவி விளையாடியபோதும்

கூட்டாஞ்சோறு
பொங்கி
குழுமி விளையாடியபோதும்

தட்டாங்கல்லை
தரையில் உருட்டி
விளையாடியபோதும்

தலையில் பானை
வைத்து தண்ணீர்
சுமந்த போதும்

என்னை
தள்ளி வைக்காத‌
நீ

தாவணி உடுத்திய போது
த‌ள்ளி வைக்கிறாயே

இதுதான்
பெண்மையின் அடையாளமோ?

எழுதியவர் : Pattu (22-Jan-11, 9:12 pm)
சேர்த்தது : pattu
பார்வை : 594

மேலே