கண் கெட்ட பிறகு
குடிமகன்களே,
அரசாங்கத்தின்,
ஆணி வேரே,
நீங்கள் இல்லை என்றால்,
நாடு என்னாகும்,
வரி பணத்தை,
வாரி கொடுப்போரே,
நீங்கள் தான்,
உங்களுக்கு,
என்ன தேவை,
அது தான்,
அரசின் நோக்கம்,
கஜானாவை,
நிரப்புவது தான்,
உங்களின் நோக்கம்,
எல்லாம் சரி தான்,
இதில் என்ன,
சிக்கல்,
கட்டிய மனைவி,
கண்ணீர் சிந்த,
அன்பை எதிர்,
பார்த்தவளுக்கு,
அடி உதை,
கொடுத்து ஆனந்தம்,
கொண்டீர்கள்,
ஒரு எமனை,
விட்டு,
மற்றொரு எமனிடம்,
போக,
நெருப்பில் எரியும்,
மனைவியை,
காப்பாற்ற கூட,
முடியாத,
குடி போதை,
உங்களுக்கு,
பால் தந்து,
வளர்த்த,
தாயின் நெற்றியை,
உடைக்கும்,
கொடுரம் உங்களுக்கு,
பெற்ற பிள்ளை,
பிச்சை எடுக்க,
எடுத்த பிச்சையில்,
நீங்கள்,
குடித்து மிதக்கும்,
கருணையும் உங்களுக்கு,
காம மிருகங்கள்,
எல்லாமே,
குடிகார மிருகங்கள் தான்,
எத்தனை,
விபத்து மரணங்கள்,
உங்களின் புண்ணியத்தால்,
நீங்கள் திருந்தினால்,
நாடு என்னாகும் ,
ஜாதி ஒழியாது,
மத சண்டை ஒழியாது,
இனம் அழிவதும் ஒழியாது,
குடி மட்டும் ஒழிந்து,
என்னாகும்,
உங்கள் வாதம்,
சரி தான்,
எல்லாம் உன்னை,
அழிக்க,
நேரம் ஆகும்,
குடி மட்டும் தான்,
உன்னையும் அழித்து,
உன்,
குடும்பத்தையும்,
உடனே அழிக்கும்,
கண் கெட்ட பிறகு,
யோசிப்பாயோ,
கண் உள்ள போதே,
சிந்திப்பாயோ,
உன் பாடு,
விஷத்தை சிறிது,
சிறிதாக,
உடலில் சேர்பதற்கு,
ஒரே அடியாய்,
நீ,
மரணிப்பதே மேல்!!!