காந்தியைப்போல் எல்லாம் வேண்டும்

காந்தியைப்போல்
நடக்க வேண்டும் !!!

காந்தியைப்போல் அதிகாலை
விழிக்க வேண்டும்!!!

காந்தியைப்போல் காற்றாட
உலவ வேண்டும்!!!

களைப்புத் தீர குளிர் நீரில்
முழுக வேண்டும் !!!

காந்தியைப்போல் அளவாக
புசிக்க வேண்டும் !!!

கண்டதெல்லாம்
தின்னாமை வேண்டும் !!!

ஒழுங்காக திட்டம் போட்டு
காரியங்கள் செய்ய வேண்டும் !!!

சொன்ன சொல்லை காந்தியைப்போல்
காக்க வேண்டும் !!!

சோம்பலை காந்தியைப்போல்
நீக்க வேண்டும் !!!

மன்னவனோ பின்னவனோ காந்தியைப்போல்
மனிதரெல்லாம் சமமென்று மதிக்க வேண்டும் !!!

சின்னவரோ கிழவர்களோ எவராக இருந்தாலும்
சிறுமையின்றி காந்தியைப்போல் சிறப்புத் தந்து
என்ன குறை எங்கு வந்தீர் எனக்கேட்டு
இன்முகமாய் குலவுகின்ற எளிமை காக்க வேண்டும் !!!

எழுதியவர் : நாமக்கல் கவிஞர் (20-Nov-13, 7:19 pm)
பார்வை : 175

மேலே