ஏட்டிக்குப் போட்டி
ஏட்டிக்குப் போட்டி
**************************
சொற்களிலே--அந்தச்
சர்க்கரையைச் சேர்த்துப்
பேச மாட்டாய்--தேகத்தில்
தேவைக்கு மேலே
தேக்கி வைத்துச்
சோகக் கடலில்
மூழ்கி விடுவாய்--
உயர்ந்த சிந்தனையில்
உயர்அழுத்தம்
உட்காருப்படி செய்யாது,
ஓடும் குருதியில் மட்டும்
உயர்அழுத்தம் ஏறிக்
கூடும்படி செயலாற்றி--மனம்
வாடும்படி வாழ்ந்திடுவாய்---
நல்லவற்றைச் செய்வதிலே
முந்திவந்து நிற்க மாட்டாய்---
வயிறு மட்டும் தொந்தியென
முந்திவந்து நிற்கும்படி
வாய்ச்சுவைக்கு அடிமையாகி
வாரி வாரிப் போட்டு
வயிற்றை நிரப்பிடுவாய்---
உடலுக்குள் திரண்டுநின்று
ஊறு செய்யும்--அந்தக்
கொழுப்பைக் கரைப்பதற்கும்
அளவோடு இருப்பதற்கும்--பல
மருத்துவ மனைகளுக்கு
நடையாய் நடந்து
படிகளைத் தேய்த்திடுவாய்---
விரட்டி அடித்து
வீழ்த்த வேண்டிய--அந்த
வாய்க்கொழுப்பை மட்டும்
வணங்கி வரவேற்று
வாழ்க்கை கொடுப்பாய்---
மூச்சினை உள்ளே இழுத்து
வாங்கி நிறுத்தி--வெளியே
மெல்ல விடுகின்ற--அந்த
நல்லதோர் பயிற்சியினை
மேற்கொள்ள மாட்டாய்---
வெட்டிப் பேச்சை மட்டும்
வேகமாக உள்ளே இழுத்து
வாங்கி நிரப்பி வைத்து--அதை
வெளியில் எடுத்துப்
பிறர்மேல் ஏவிவிட்டுப்
பெருந்துயர் தந்திவய்---
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
