பட்ட மரமும் பழுத்த மரமும்

பட்ட மரமும் பழுத்த மரமும்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ கண்ணிற்[கு] அணிகலம் கண்ணோட்டம்
அஃ[து]இன்றேல்
புண்என்[று] உணரப் படும்.
திருக்குறள் 0575 ]

பட்டமரம் வீழ்ந்து விட்டால்
பாதகம் ஒன்றும் இல்லை....

நட்டநடு வீதியிலே நின்ற--ஒரு
கெட்டமரம் பட்டாலும்,
சுட்டுவிடும் கேடொன்றும்
கிட்டவரப் போவதில்லை

துட்டமரம் வெட்டுப் பட்டுத்--தரை
மட்டமாகக் கிடந்தாலும்,
முட்டிவிடும் துயரம் ஏதும்
தொட்டுவிடப் போவ தில்லை---

கட்டைமரம் நெட்டைமரம்
எந்த மரமானாலும்--வேர்
விட்டமரம் பட்டுவிட்டால்,
வட்டமிடும் வேதனைகள்---

பட்டஅவை கண்ணில்
பட்டுவிட்டால்
பட்டுவிடும் உள்ளம்---இரக்கப்
பட்டுவிடும் உள்ளம்----

எழுதியவர் : பேராசிரியர் அரங்கராசன் (20-Nov-13, 7:36 pm)
பார்வை : 89

மேலே