கண்ணீர்ப் புள்ளி
மேகம் உடைத்து
உன் விழிகளை அலையவிட்டு
ஒரு கோப்பைக்குள் போட்டு நிரப்பி
நான் பேனாவை மண்டைக்குள் ஓட்டி கெண்டுவேன்
என் தேசத்திற்குள் நீ திரி
அங்கு சன்னலுமில்லை கதவுமில்லை
ஆனால் காற்று வரும் உன் முகவரி சுமந்து
எங்கிருந்தாவது அழு
நனைந்திடுவேன் உனது கண்ணீரில்
ஒரு பானை மௌனம் குடித்துப் பிறந்தவளே
என் நெஞ்சில் தலைபோட்டு அழு
கண்ணீரில் சுவையும், அழுவதில் சுகமும் இருக்கலாம்
இனி ஒரு சுமைக்கு ஆறுதல் கூற தவித்தும்,
ஒரு சுகத்திற்கு நன்றிகூற துடித்தும் பார்
வாழ்க்கையில் ஈரம் கூறும்
அங்கு சன்னலுமில்லை, கதவுமில்லை
ஆனால் காற்று வரும் உன் முகவரி சுமந்து
சிரி அழுகிறவரை
அழு சிரிக்கிறவரை
மௌனி நான் காத்திருக்கும்வரை
பேசு நான் சாகும்வரை