சதுரங்கம்-14
கிடைத்த ஒருவனும் இறந்துவிட்டான்,,, இனி என்ன செய்வது?? என்ற குழப்பத்தில் தன் மேலதிகாரி முன் அமர்ந்திருந்தார் விஜய்,,, மேஜையில் இறந்து போனவனின் பிரேத பரிசோதனை அறிக்கை காற்றில் படபடத்தது
"என்ன மிஸ்டர் விஜய் எப்படி இது சாத்தியம் போலீஸ் ஸ்டேஷன்குள்ள அதும் நீங்க இருக்கும்போதே அவன் குடிச்ச தண்ணீர்ல யார் விஷம் கலந்துருக்க முடியும்,,,, அப்போ குற்றவாளி நமக்குள்ளயே இருக்கானா?"- கேள்விகள் வந்தது விஜயை பார்த்து,,,,,,,,,,,
மௌனமாக யோசித்த விஜய், "சார் எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க கொலையாளி யாருன்னு கண்டுபிடிச்சி உங்க முன்னாடி நிறுத்துறேன்"
அவரின் பேச்சில் தெரிந்த நம்பிக்கையை அவரின் அதிகாரியால் புரிந்து கொள்ள முடியவில்லை
"எப்படி விஜய் எப்படி கண்டுபுடிப்பீங்க"
"சார் எனக்கு நான் கேக்குற facilites மட்டும் செஞ்சி கொடுங்க,,,,,,,,,,, அல்மோஸ்ட் நான் குற்றவாளிய நெருங்கிட்டேன்" - என்றார் விஜய்
"என்ன சொல்றீங்க விஜய்"- அதிர்ச்சியாய் கேட்டார் அதிகாரி
"ஆமா சார் ஒரு வாரம் மட்டும் டைம் குடுங்க உங்க முன்னாடி அந்த குற்றவாளி கண்டிப்பா இருப்பான்"- உறுதியாக சொன்னார் மேலும் அந்த குற்றவாளிய பிடிப்பதற்கான தன திட்டத்தையும் சொன்னார்
"ஓகே மிஸ்டர் விஜய் நீங்க கேட்குற எல்லா facilities-ம் arrange பண்றேன்"
"தேங்க யு சார்"- சல்யுட் ஒன்றை வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்
பெரியகுளம் மெயின் ரோடு,
"மிஸ் உஷா இங்கிருந்து தான் பெரியகுளம் ஸ்டாட் ஆகுது,,,, நீங்க பாக்க போறது ரொம்ப பெரிய ஆள so ரொம்ப carefulla இருங்க,,,,,,, ஏதும் பிராப்ளம்ன அடுத்த நிமிசமே நீங்க வெளிய வந்துடனும் ஓகே"- பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தி கொண்டிருந்தார் பெரியகுளம் இன்ஸ்பெக்ட்டர் சரவணன்
"ஓகே சார் நீங்க எப்டி சொல்றீங்களோ நான் அப்டியே செய்றேன்"- ஆமோதித்தாள் உஷா
கார் அந்த தெரு முனையில் நின்றது,,,
"மிஸ் உஷா ஜாக்கிரத நான் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கட்டும்"
"சரி சார்"
கையில் ஒரு பழைய பை ஒன்றை தூக்கி கொண்டு
அந்த வீடு கேட்-ஐ தட்டினால் உஷா
ஒரு வேலைக்காரன் வெளியே வந்து பார்த்தான்,,
"யாரு என்ன வேணும்??"- என்றான்
"ராமலிங்கம் ஐயாவ பாக்கணும்"
அவன் கேட் அருகில் வந்தான்,"என்ன விசயமா பாக்கணும்?"
"இல்ல என் வேல விஷயமா அய்யா வர சொல்லிருந்தாரு அதன்"
"அய்யா வீட்டுல இல்லை போயிட்டு சாயங்காலம் வா"
"அய்யா தான் இப்போ வீட்டுல போய் இரு நான் அரை மணி நேரத்துல வந்துடுறேனு சொன்னாரு"
"ஓ அப்படியா சரி உள்ளே வா"
கேட்-ஐ திறந்துவிட்டான்,,
உள்ளே சென்றாள் உஷா,,,
"அந்த ரூம்ல போய் வெயிட் பண்ணு அய்யா வருவாரு"
ரூம் கதவை திறந்து உள்ளே போனாள் உஷா
அங்கே,
நாற்காலியில் ஆடியபடி இராமலிங்கம்
(விளையாடுவோம்,,,,,,,,,,,,,)