சதுரங்கம்-15
உஷா வீட்டிற்குள் சென்ற அடுத்த நொடி விஜயிடம் இருந்து அழைப்பு வந்தது சரவணனுக்கு,,,
"ஹலோ சரவணன், நான் இன்ஸ்பெக்ட்டர் விஜய் பேசுறேன்,,,"
"ஹலோ சொல்லுங்க சார் "
"எல்லாம் சரியாய் இருக்கா அங்க ஏதும் பிராப்ளம் இல்லையே"
"இல்ல சார், உங்களுக்கு வந்த போன், அப்புறம் உஷாக்கு வந்த போன் ரெண்டுமே பெரியகுளம் std பூத்துலேந்து தான் வந்துருக்கு,,,,,, அங்கிருந்த staff கொடுத்த கார் நம்பர் வச்சி,,,
அந்த கால் பண்ணது இராமலிங்கம்-தான்னு conform ஆயிடுச்சு
இப்போ மிஸ் உஷாவோட ஐடியா படி அவங்க ஹெல்ப் கேட்குற மாதிரி இராமலிங்கம் வீடுக்குள போயிருகாங்க
எல்லாமே நாம நெனச்சா மாதிரியே போயிட்டு இருக்கு சார் எந்த ப்ராப்ளமும் இல்ல"- என்றார் சரவணன்
"ஓகே மிஸ்டர் சரவணன்,,,, be அலெர்ட்,,,,,,, குற்றவாளி தப்பிட கூடாது,"
"ஓகே சார்"- இணைப்பு துண்டிக்கப்பட்டது ,,,,,
மதுரை ஏர்ப்போர்டில் மும்பையிலிருந்து சென்னை வழி மதுரைவரும் விமானத்திற்காக காத்துகொண்டிருந்தார் விஜய்,,,
விமான அறிவிப்பு ஒலிக்க,,, விமானம் தரை இறங்கியது
பயணிகளில் ஒருவராக தரை இறங்கினான் ராகவன்,,,
"ஹலோ ராகவன்"
"ஹாய் விஜய்,,, ஹொவ் ஆர் யு"
"ம்ம் குட் ,,,, வாட் அபௌட் யு "
"im வெரி குட்"
"ஓகே வா போகலாம்"
இருவரும் காரில் ஏறினார்கள்,,, சிறிது நேர மௌனத்திற்கு பின்,
"அப்பறம் விஜய் உன் கேஸ் எல்லாம் எந்த stage-ல இருக்கு"
"அதன் நீ வந்துடல இனி கிளைமாக்ஸ் தான், ஓகே நான் சொன்ன விஷயம் என்னாச்சு ராகவ்"
"டன்"- ஒரு வார்த்தையில் பதிலளித்தான் ராகவன்
விஜயும் ராகவனும், விஜயின் மேலதிகாரியை சந்தித்தார்கள்
"சார் நான் சொன்னேல இவர் தான் ராகவன் மும்பை போலீஸ் இலாக்கால இன்ஸ்பெக்டெரா இருக்காரு,,,, அது மட்டும் இல்ல சமிபத்துல மும்பைல நடந்த குண்டு வெடிப்பு பத்தின விசாரணையும் இவர் தான் பண்றாரு"- ராகவனை அறிமுகம் செய்து கொண்டிருந்தான் விஜய்
ராகவன், தான் வந்ததற்கான காரணத்தை சொன்னான்,,,
அதில் தான் இத்தனை நாளாக தேடி கொண்டிருந்த குற்றவாளி யார் என்பதை அறிந்து கொண்டார் விஜய்
அந்த குற்றவாளி யார் என்று அறிந்த நொடி விக்கித்து போனார் விஜய்
(விளையாடுவோம் ,,,,,,,,,,,,,,,,)