மறைத்தது மரமா மனமா
மரத்தடியில் மறைந்து
மாற்றிக்கொள்ளும் முத்தக் காட்சியின்
நிழலை நின்றவாறு
பார்த்த அவருக்கு கோபம்
"இவங்கள எல்லாம் யாரு
பெத்து வளத்துனான்களோ?"
அவருக்கு தெரியவில்லை
தன்மகள்தான் அதுவென்று ! ! !
மரம் மறைத்துவிட்டதல்லவா...?