இன்றைய விடியலே இனிய கவிதையே

புன்னகைக் கவியே
புதியமென் மொழியே
பிள்ளையே கிளியே வெகு
பிரியமான தமிழே
வெற்றிப் பெண்ணே உறங்கு
விடிந்ததுபோல் நடிக்குது உலகு...!
இமை மூடி நீ புன்னகைக்கையில் என்
இதயத்துக்குள் இசைக் கச்சேரி.....
பெண்குழந்தைகள் பிறக்க வேண்டும் - மானுடர்
பெருமிதமே கொள்ளவேண்டும்.....
செல்வமே நீதான் என்றே அவர்கள்
சிரித்தே உனைக் கொண்டாட வேண்டும்...
இன்றைக்குப் பிறந்த நாளைய விடியலே - மன
இருளைப் போக்கியே எனை அன்னையாய் மாற்றடி