காலம் மாறிப் போச்சு

காலையில் எழுந்து கணினியை எடுத்து
மடியினில் கிடத்தி மவுசைப் பிடித்து
வலையில் புகுந்து சொடுக்கச் சொடுக்க
தேவைப் பட்ட பச்சைக் காய்கறி
மற்றும் இதர பொருட்கள் அனைத்தும்
வாங்கி முடிக்க வங்கிக் கார்டின்
நம்பர் மட்டும் கொடுத்தால் போதும்
குளித்து முடிக்க வீட்டின் கதவை
யாரோ தட்டும் சத்தம் கேட்டுத்
திறக்கக் கதவை கேட்ட பொருள்கள்
எல்லாம் கண்முன் வைத்துச் சென்றான்
விடலை யொருவன் வேகமாக

எழுதியவர் : (23-Nov-13, 3:03 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 71

மேலே