ஒரு குயலின் குரல்---உழவன்

வெய்யில் குளித்து வியர்வை வடித்து
பைமைசெய் உழவே முதல்—கையில்
உயிர்கள் பிழைக்க உணவு வழங்கும்
உழவே உலகின் சிறப்பு.

உண்டும் அளித்தும் உலகை நிறுத்தும்
உழவின் பின்னே மற்று—அண்டும்
வறுமை வெய்யில் வருத்தா வையம்
உழவு இருத்தும் செயல்.

உழைத்தும் உண்டும் கையேந்தி வாழா
ஒளியா உழவே தலை.—மலைத்து
உழவது சோர்ந்தால் உயிர்களும் வாழா
உழவு வாழவும் வாழ்.

மண்ணும் புழுதியா வுணத்தி உழுதிட
பின்னு மெதற்கு உரம்.—உண்ணும்
எருவிட்டு ஏரோட்டி நீரிட்டிக் கட்டபின்
காத்தலின் பாடே நலம்.

மனையா ளன்னத் தினமும் பழக
நிலமுந் தானும் மலர்.—முனையக்
கட்டமும் நட்டமும் எண்ணிக் கலங்கின்
வெட்டென நகுமே நிலம்.


கொ..பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (24-Nov-13, 12:46 am)
பார்வை : 95

மேலே