எல்லா நிறமும் வலு விழக்கின்றன
தவிப்புகளை தவிர்த்த பொழுதுகள்
விடியலில் துவங்க
வனத்தில்
என் வலியின் வண்ணம்
சிவந்து தெரிய
நீலம் பூசி மறைக்கப் பார்த்தது
நானோ
என் சிவப்பையெல்லாம்
கடலில் கரைத்து விடத் துப்பி
தீர்த்தபடி
பரிகாசம் செய்த
பனித்துளியை தின்றுநகர
உனது அழைப்புக்கான
வருகைக்கான
பசியாறலுக்கான
எல்லாம் மறுத்து
நதியின் ஈரத்தை
நனைத்தபடி நனைந்து
வென்று விட்ட பெருமிதத்தில்
வலி பூசிய வாளை
உறை புகுத்திய பின்னும்
பசியெடுக்க
தனிமையைத் தின்னப் பழகுகின்றேன்
எல்லா நிறமும்