கனவு மெய்ப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டுமெனில் -நல்ல
காட்சிகள் காண வேண்டுமடா
கிளர்ச்சி செய்தல் வேண்டுமடா -தெருவில்
கீழ் மேல் என்ற பேதத்தினை -பொதுமை
குணத்துடன் நன்றாய் என்றென்றும்
கூண்டோடு அழித்தல் வேண்டுமடா-உலகம்
கேட்டவன் என்றுன்னை வெறுத்தாலும்
கேடில்லா உலகம் நீ காண
கையேந்தும் மனிதனும் உன் தோழன் -நாட்டின்
கொற்றவனும் அவனுகுக் கீழே தான் என்ற
கோட்டுப் போட்ட புலவனது
கௌரவ மொழிகள் கேட்டுவிடு
தமிழுடன்
விவேக்பாரதி