சதுரங்கம்-19
அபிநயா பத்திரிகை நிருபர்களிடம் பேசிக் கொண்டிருந்த சமயம் விஜயின் அலைபேசி சிணுங்கி சில முக்கிய தகவல்களை அளித்து விட்டு அமைதியானது
அதை விஜய் ராகவனிடம் சொல்லி கொண்டே தனது ஜீப்பை ஓட்டிக்கொண்டிருந்தார்
"என்ன விஜய் இப்ப தான் எல்லாம் முடிஞ்சிதுன்னு இருந்தோம் இது என்ன புது சிக்கல் இன்னும் இந்த கேஸ்-க்கு பின்னாடி என்னலாம் இருக்குனு தெரிலையே "
"ராகவ் ஒரு அணு சிதறுனா பல சக்திகள் வெளிவருவது போல ஒரு கிரிமினல் திட்டம் சிதறுனா பல உண்மைகள் வெளி வரும்,,,,,,,,, வர வரைக்கும் வரட்டும் எல்லாம் நம்ம தேசத்துக்கு நன்மைதானே "- என்றார் விஜய்
ராகவன் அமைதியானான்,,,,,,,,,,
"என்ன ராகவ் யோசிக்கிற"
"உஷாவை பத்திதான்,,, அவளின் பூபோன்ற முகத்துக்கு பின்னால இப்படி ஒரு கொரூர முகம் இருக்கும்னு நான் எதிர்ப்பாக்கவே இல்ல,,,"- என்றார் ராகவன்
"நான் கூட எதிர்ப்பாக்கல ராகவ் நீயும் அந்த கூட்டத்துல ஒருத்தனா இருப்பன்னு"- சாதரணமாகவே ஒரு பெரிய உண்மையை போட்டுடைத்தார் விஜய்
"என்ன சொல்ற விஜய்,,,,,,,,,,,,,, நீ என்ன சொல்ற" - கேட்டு கொண்டே தனது துப்பாக்கியை எடுக்க முயன்றான் ராகவன்
ஒரு கையில் ஸ்டேரிங் மற்றொரு கையில் ராகவன் அப்படியே பிரேக் அடித்தார் விஜய்,,,
ராகவன் ஜீப்பிலிருந்து கீழே விழுந்தான், ராகவனின் துப்பாக்கி ஒரு புறம் விழுந்தது
"விஜய் நீ என்ன கண்டுபுடிசிட்ட இனி உன்ன உயிரோட விட்டா எனக்கு தான் ஆபத்து,,,,,"- என்றவாறு விஜயை மூர்க்கமாக தாக்கினான் ராகவன்
அந்த தாக்குதலில் நிலைகுலைந்தார் விஜய்,,,
ராகவன் அடுத்த தாக்குதலுக்கு தயாராவதற்குள் அவனின் இடுப்பை எட்டி உதைத்தார் விஜய்,,, அடி வயிறு கலங்க அப்படியே விழுந்தான் ராகவன்
அந்த சமயம் ராகவனின் துப்பாக்கியை ஆக்கிரமித்தார் விஜய்
"ராகவ் தீவிரவாதம் எந்த துறைல வேணாலும் இருக்கலாம் ,,,,,, ஆனா "வேலியே பயிர மேஞ்ச கதையா" போலீஸ்-லையே இருக்க கூடாது,,,, அத விட ஒரு கேவலம் எதுமே கிடையாது உன்ன நான் அர்ரெஸ்ட் பண்ண போறதில்ல உன்ன அரெஸ்ட் பண்ணி நம்ம deparment மானத்த வாங்குரதவிட உன்ன இங்கயே கொல்ல போறேன்
நாட்டுக்காக ஒரு ராணுவ வீரன் செய்ற வேலைய இங்க போலீஸ்-ஆ இருந்து நான் செய்யபோறேன்"
"வேண்டாம் விஜய் வேண்டாம்,,, நான் உன் நண்பன்,,, விட்டுடு விஜய்"
"எனக்கு நட்பை விட நாடுதான் முக்கியம்"- சுட்டார்
ஆறு குண்டுகளும் ராகவனின் மேல் பதிந்தது
விஜய் பார்த்து கொண்டிருக்கும்போதே ஒரு தீவிரவாதம் உயிர் விட்டது
ராகவனை அங்கேயே பெட்ரோல் ஊற்றி எரித்தார்
பின் சாதாரண மனிதனாகி, ராகவனின் நண்பனாகி கண்ணீர் விட்டார் விஜய்
***********************(முற்றும்)******************