ஒரு தந்தையின் பாசம்

லோகநாதன் புத்தகத்தை திருப்பி எதையோ யோசித்து கொண்டிருந்தான் ....அவன் கையில் இருந்ததோ மருந்துகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் .......

அப்பா அருகில் வந்து வினவினார் ."என்னப்பா லோகி எதையோ யோசிச்சிட்டு இருக்க ?.உடம்பு பரவா இல்லையா ?இன்னும் கால் வலி இருக்கா?".என்று பொய்யாக சிரித்த முகத்துடன் கேட்டார் .

அதற்க்கு லோகி விசித்தரமாக பார்த்து கண்கலங்கி கூறினான் ."அப்பா என்னிடம் எதாவது மறைதீர்களா ?பொய் சொல்லாமல் சொல்லுங்கள் .அன் உடம்புக்கு என்ன ?"

லோகி! "உன் உடம்புக்கு ஒன்னும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டார் .இன்னும் 6 மாதம் மருந்து எத்திகிட்டா எல்லாம் சரி ஆயிடுமாம் ...கவலை படாத பா ...."அப்பா லோகியை கை அமர்த்தினார் .....

லோகி உடனே சலிப்பாக சிரித்தான் ..."அப்பா ! நீங்க மறந்துடிங்களா?.நான் ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட் "எனக்கு என்ன வியாதி,அதுகென்ன மருந்துன்னு எல்லாம் தெரியும் ...."நேத்து எனக்கு எத்தன மருந்து பெற பாத்தேன் ...அது எதுக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன் னு தன புத்தகத்தை அப்பா கிட்ட காண்பிச்சான் "

அப்பா அதிர்ந்து பொய் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் ..."லோகி !நாம யாருக்கும் எந்த பாவமும் செய்யலையே டா..நமக்கு என் இந்த பேரிடி .நீ மத்தவங்க மனசு கோணாம நடந்துபியே டா...உனக்கு போய் கடவுள் இப்படி ஒரு நோய்ய தன்துடானே..."

உடனே லோகியும் கண்கலங்கி அப்பாவை தேற்றினான் .."அப்பா இது சரி ஆயிடும் .நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிறேன் ...நீங்க அம்மகிடையும் தங்கசிகிடையும் விவரமா சொல்லாதிங்க ..வருத்த படுவாங்க ".

அப்பா "என்னால முடில பா ....."சொல்லிக்கொண்டே வெளியேறினார் .....

அம்மா அப்பாவை பார்த்து "எங்க ஒரு மாதிரி இருக்கீங்க ..அதன் லோகிக்கு எல்லாம் சரி ஆயிடும்னு டாக்டர் சொன்னாரு இல்ல ?..அப்புறம் என்ன ?"
"ஒன்னும் இல்லடி மீனாக்ஷி ...கொஞ்சம் அலுப்பா இருக்கு ....நம்ப பையனுக்கு எல்லாம் சரி ஆயிடும் ...அவனுக்கு ஒன்னும் இல்லடி.பாரு அவன் டாக்டர் ஆகி இந்த மாதிரி நோய் வந்தவங்களுக்கு இலவசமா சிகிச்சை பண்ணுவான்.பெரிய ஆளா வருவான் .அப்புறம் என்னடி ?..சொல்லி அப்பா சிரித்தார் .

உடனே குட்டி சுதா ஓடி வந்து ஆபவை கட்டி அணைத்து "அப்பா !நானு ?"கேட்டாள்..

உடனே உள்ளிருந்து லோகி வந்து "நான் டாக்டர் னா..நீ விஞ்சானி டி....நீ மருந்து கண்டுபிடி .நான் எல்லாருக்கும் கொடுக்கறேன் ."டீலா ? நோ டீலா ?"

"சரிடா டீல்...."சுதா கத்தினாள்....

"அப்பவாவுது என்ன அண்ணா னு கூப்புடு டி "..லோகி கெஞ்சினான் .......

"போடா ...."சொல்லிக்கொண்டே சுதா அவனை முறைத்தாள்......

எல்லாம் சாப்பிட்டு படுக்க சென்றனர் .....அப்பாவிற்கு மட்டும் தூக்கம் வரவில்லை ....டாக்டர் சொன்னதே நினைவில் இருந்தது ......"உங்க பையனுக்கு புற்றுநோய் முற்றி விட்டது..நாட்களை எண்ணி கொண்டிருக்கிறான் ..சிகிச்சை பலன் குறைவு தான் "...நினைத்து மிரண்டார் "நமக்கு கொல்லி போட கூட நம் பிள்ளை இருக்கா மாட்டானா?" என்று சதம் போட்டு அழுதார்

உடனே மீனாட்சியும் லோகியும் அவரருகில் ஓடி வந்தனர் ."என்னாச்சு ?"என்று கேட்பதற்குள் நெஞ்சை பிடித்து துடித்தார் அப்பா ......

லோகியும் தனக்கு தெரிந்த ஹார்ட் அட்டாக் முதலுதவி அனைத்தும் செய்தான் ....பலனில்லை ..அப்பாவின் உயிர் லோகியின் உயிர் பிரியும் முன்பே பிரிந்தது ....

"கொல்லி போட லோகி இருந்தான் "

எழுதியவர் : ஸ்ரீமதி வடிவேலன் (25-Nov-13, 10:28 am)
பார்வை : 482

மேலே