சதுரங்கம்-18

சரவணன் சென்று அபிநயாவை அழைத்து வந்தார்

கண்ணான காதல் கணவனை இழந்து, உயிரான தோழியும் பகைமையாகி தனக்கென்று யாரும் இல்லாதவளாய் இருந்தாள் அபிநயா


"மிசெஸ் அபிநயா, உங்க கணவரோட மரணம் உங்க கண் முன் நடந்ததா சொல்றாங்க அது உண்மையா??"- என்றார் ஒரு நிருபர்

அபிநயா அழ ஆரம்பித்து விட்டாள்,,,,

"ஆமாம்"- கண்ணீருடன் பதிலளித்தாள்,,,,,,,

"அத கொஞ்சம் விபரமா சொல்ல முடியுமா"


"என் தோழி உஷா ஊரிலிருந்து வந்துருப்பதா என் கணவர் எனக்கு போன் செஞ்சாரு நானும் என் தோழிய பாக்கனும்குற ஆசைல என் வேலையகூட முடிக்காம காலைலே புறப்பட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்துட்டேன் அங்கே என் கணவர் உஷாக்கூட எதோ விவாதம் செஞ்சிட்டு இருந்தாரு
நான் மறஞ்சிருந்து எல்லாத்தையும் கேட்டேன்

திடீர்னு உஷா தன் கை துப்பாகியால என் கணவர சுட்டுட்டா நான் பயத்துல அலறினேன் அவ என்னையும் துப்பாக்கி முனைல கடத்தி அவ மாமா இராமலிங்கம் கஸ்டடில வச்சிட்டா

போலீஸ் வந்து தான் என்னை காப்பாத்துனாங்க"- கூறிவிட்டு அழுதாள் அபிநயா


அப்போது விஜயின் செல் போன் சிணுங்கியது,,,,,,,,

அதில் கூறப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் விஜயை வியப்பில் ஆழ்த்தியது


விஜய் ராகவனை தனியாக அழைத்தார்,,,,,,

"ராகவ் இந்த கேஸ் இன்னும் முடில்ல"

"என்ன சொல்ற விஜய் அதன் உஷாவை அரெஸ்ட் பண்ணியாச்சு அவல கோர்ட்-ல நிறுத்திட இந்த கேஸ் முடிஞ்சிடும்"

"இல்ல ராகவ் என் கூட வா"


எங்கே செல்கிறார்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

(விளையாடுவோம் ,,,,,,,,,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (25-Nov-13, 10:19 am)
பார்வை : 420

மேலே