சொர்க்கமும் நரகமும்
கணினியுலகில் மாபெரும் சாதனை செய்த அறிஞன் ஒருவன் இறந்து வானுலகம் செல்கிறார்.
அங்கு ...
எமனுக்கு ஒரே குழப்பம்.. அந்த மேதையைப் பார்த்து, "எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. உங்களை சொர்க்கத்திற்கு அனுப்புவதா? இல்லை நரகத்திற்கு அனுப்புவதா? என்று. நீங்கள் கணினியுலகில் எவ்வளவோ நல்லது செய்தாலும் மக்களை நீங்கள் ரொம்பவே ஏமாத்தி இருக்கிறீர்கள். நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.... நீங்களே எங்கு செல்லவேண்டுமென்று முடிவு செய்துகொள்ளலாம்..'
இதை கேட்ட அவர், "சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார்?"
"நீங்களே ஒரு தடவை இரண்டையும் பார்த்து விடுங்களேன்" என்று எமன் அவருக்கு சாய்ஸ் கொடுத்தார்.
முதலில் ஒரு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கே அழகான அரண்மனை கடற்கரையில் இருந்தது.அழகான தேவதைகள் ஆயிரகணக்கில் இருந்தனர். மொத்த இடமும் குளிர் பதன வசதி செய்யப்பட்டிருந்தது. அவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. "இது என்ன இடம்?" என்று கேட்டார்.
நரகம் என்று பதில் வந்தது.
"அட ... நரகமே இப்படின்னா சொர்க்கம் எந்த அளவுக்கு இருக்கும்" என நினைத்து கொண்டார்.
அப்புறம் சொர்க்கத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கே சாதாரண சிறு சிறு வீடுகள், வெள்ளை மேகங்கள், அழகான பெண்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட அவர், பளிச்சென்று "நான் நரகத்திற்கே போகிறேன்". என்றார்.
"உங்கள் விருப்பம்" என்று பதில் வந்தது.
இரண்டு வாரம் கழித்து எமதர்மன், அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்துவர நரகத்திற்கு சென்றார்.
அங்கே ஒரு சுவரில் உடல் முழுவதும் ஆணி அடிக்கப்பட்டு, தீ ஜுவாலைகள் மத்தியில், கருப்பு குகைக்குள் சாத்தான்களால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார் அவர்.
"எப்படி இருக்கிங்க ஐயா ?"
"என்ன ஒரு கொடுமை? நீங்கள் காண்பித்த மாளிகை,கடற்கரை, தேவதைகள் எங்கே?" என்று கேட்டார் அவர்
அதற்கு, எமதர்மன், "ஓ அதுவா ! அது வெறும் ஸ்கிரீன் சேவர்" என்று அமைதியாக சொன்னான்,