அகமும் புறமும்
அகமும் புறமும்
மனிதா--!உன்மனம்
குப்பைத் தொட்டியில்
குடியிருக்கிறது---
சாய்க்கடையில்--உறவைத்
தேடி அலைகிறது---
வீதியில் வீசி
எறியப்பட்டுக் கிடக்கும்
எச்சில் இலைகளை
உச்சியில் சுமக்கிறது----
அழுக்கிற்கு அழகாக
விழாஎடுக்கிறது
முடைநாற்றத்தை--உயர்
மூச்சாகக் கொள்கிறது---
மனிதா--! உன்கண்களோ---
சூரியனில் கால்வைக்கப்
பாதைகளைத் தேடுகின்றன---