கலை-பிரியா வாழ்க----------------அகன்

தேன் பொழிந்து அரங்கம் தித்தித்ததாம்-வாழ்த்து
வான் மேகம் படர்ந்து ஆனந்தம் பொழிந்ததாம்-
நான் வந்து கூடவில்லையே கூட்டாளி அழைத்தும்
என் உடல் நலம் அன்று குன்றியதே .நண்பா.!

மான் வந்து மழலைக் கூட்டமென ஆடியதாம்
ஊன் கலப்பிலா உயர் விருந்து உவகை கூட்டியதாம்
நான் வந்து கூடவில்லையே கூட்டாளி அழைத்தும்
என் உடல் நலம் அன்று குன்றியதே .நண்பா.!

கானகத்தின் குயிலெல்லாம் கீதம் பாடியதாம்
பானக சுவை தோற்கும் புன்னகை தவழ்ந்ததுவாம்
நான் வந்து கூடவில்லையே கூட்டாளி அழைத்தும்
என் உடல் நலம் அன்று குன்றியதே .நண்பா.!

சிந்தனையில் சீர்மிகு தமிழ்ச் சொல்லெடுத்து
வந்தவரெல்லாம் வாழ்த்தினராம் மணமக்களை
நான் வந்து சேரவில்லையே கூட்டாளி அழைத்தும்
என் உடல் நலம் அன்று குன்றியதே .நண்பா.!

சோதனை. உன்வீட்டு நிகழ்வில் நானில்லை
வேதனை இது வேண்டாம் என் விரோதிக்கும்
இங்கிருந்து வாழ்த்தினேன் நம் நட்பு சொல்லெடுத்து
தங்கசிமிழ் மகளை- சிங்கம்நிகர் மணமகனை-!!

நான் வந்து நேரில் வாழ்த்துவேன் ஒரு நாள்
கூன் வந்து நமை கூடும் முன்பே..இது உண்மை.!!

எழுதியவர் : அகன் (25-Nov-13, 8:41 pm)
பார்வை : 111

மேலே