அடுக்குமாடி குடியிரிப்பில், வசிப்பவரா நீங்கள்

ஒருசில கேள்விகள் உங்களுக்கு !

வருடத்திற்கு ஒரு முறை
கைபேசி மாற்றுபவரா நீங்கள் ?
ஒருமுறையாவது ஒரு செடி
வளர்க்க முற்பற்று இருக்கிறீர்களா?
தினம் காலை பல்துலக்கும் முன்
அதன் வளர்ச்சியில் லயிதிருக்கிரிர்களா ,
அது மரமாக அதை தழுவி ளா,
மழையில் தலைகுளித்த வாழைமரம்
பின் மழை காற்றில் தலை உணர்த்த
கண்டு இருக்றீர்களா ,
உன் வீட்டு தென்னை மரத்தின் கீழ்
நின்று அதன் நீரை பருகி இருக்றீர்களா ,
பூத்த வெட்கத்தில் தலைகவிழ்ந்த மாதுளை பூ ,
காகம் பாதி கொத்தி குருவிக்கு மீதி வைத்த பப்பாளி ,
இவை கண்டு மகிழ்ந்தது உண்டோ ?,
செங்கீரையும் , கருவேற்பிலை , கொத்தமல்லி கத்திரி வெண்டை ,நீ
வளர்த்து உண்டதுண்டோ ?
உன் தாய் உனக்களித்த பாலை நினைத்து
மனம் உருகுவது போல் ,
நீ உண்ண உணவை அளித்த இயற்கையை
நினைத்ததுண்டோ ,கூவி செல்லும் குயில் தூரத்து பனை மரத்தில் ஒழிவதை எட்டி எட்டி பார்த்ததுண்டோ

இல்லையா !!!!

இன்னும் வாழ பழகாதவர்கள் நீங்கள் ....

எழுதியவர் : VENBHAA (26-Nov-13, 11:12 am)
சேர்த்தது : venbhaa
பார்வை : 53

மேலே