புரிந்துகொள்
உன்னைக் காயப்படுத்துவது என் நோக்கமன்று..
உன்னை வேறு யாரும் காயப்படுத்தக் கூடாது என்பதே என் நோக்கம்.
வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர் சொல்கையில் கேட்ப்போம்
வலிகளை சுமக்கும் நான் சொல்லுவதை நீ கேட்பாயாக ....
உன் சந்தோசத்தில் என் சந்தோசம் புதைந்து கிடக்கிறது.
அன்பை மட்டும் காட்டிச் செல்லும் உறவுமுறை நானில்லை....
உன்னைத் தட்டிக் கொடுக்கக் கூடிய உத்தமமான உறவுமுறை நானுனக்கு ...
புரிவது கொஞ்சம் கடினம்தான்.
புரிந்தால் நீ என்னைப் பிரிவது என்பது முடியாத ஒன்றுதான்...
புரிந்து நீ பிரிவாயானால் நினைவு என்றும் சுகம்தான்!!