தமிழுக்கு ஒரு வணக்கம்
என்னை தாலாட்ட
என் தாய்க்கு
கற்று கொடுத்தாய் ....
என்னோடு பேச
எனது
நண்பர்களுக்கு கற்று கொடுத்தாய் ....
இருளில் இருந்து
வெளிச்சம் காண
அனைவருக்கும் வழி செய்தாய் .....
சாதனையாளர்களை
பாராட்ட
எனக்கொரு வார்த்தையும் தந்தாய் ....
கோழையாய் இருந்த
யாவரையும்
கோட்டையில் அமர செய்தாய் ....
இத்தனையும் செய்துவிட்டு
சாதனையின் காரணியாய்,
ஒன்றும் தெரியாதது போல
ஏன் பின்னால் நிற்கிறாய் ....
தைரியமாய் பேச செய்யும் உன்னை
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன் ....
தயக்கம் நீக்கும் உன்னை
மனதார
வணங்குகிறேன் .....
பேதைமை நீக்கும் உன்னை
பெருமையோடு
வணங்குகிறேன் .....
இருளை நீக்கும் உன்னை
இரு கை கூப்பி
வணங்குகிறேன் .....
சிரம் தாழ்த்தி வணங்கினாலும்,
மனதார வணங்கினாலும்,
பெருமையோடு வணங்கினாலும்,
இரு கை கூப்பி வணங்கினாலும் ....
எதுவும் உனக்கு நிகரல்ல ....
எனவே ....
வணங்குகிறேன்
உனது தாள் பணிந்து .....