உனக்கென்ன மேலே நின்றாய்..!

இறைவா...!
உன்னக்கென்ன
மேலே நின்றாய்...!
எத்தனை
எத்தனை
போலிவழ்க்கைகள்!
நிஜத்தைதேடி போனால்
நிம்மதி போகிறது...!
எத்தனை
ஏமாற்றங்கள்
வாழ்க்கையில்...!
கனவுகளும்
கற்பனைகளும்
காற்றோடு
கலந்துவிடுகின்றன..!
எங்கோ ஒரு முலையில்
எப்போதோ தொலைத்த
வாழ்கையை ...
இப்பொது
இனம் புரியாமல்
தேடிக் கொண்டிருக்கும்
இளவட்டங்கள்...!
ஏய் மனிதா...
நான் வாழ்ந்த வாழ்க்கை
இதுதானடா...
என்னைப் பார்த்தாவது
புரிந்து கொள்... என்ற
பழமை வாதியை
பக்குவமாய் தள்ளிவிட்டு...
புரியும் பொழுது
பரிதவித்து
அலையும்
அன்றாடங்
காய்ச்சிகள்...!
காசுக்காக
கற்பை கூட
விலைபேசும்
விலைமாதர்...
காசுக்காக
பெற்றவர்களை
முதியோர் இல்லம்
அனுப்பும்
முதுகெலும்பில்லாதாவர்கள்...!
காசுக்காக
கணவன் மனைவி
மனைவி கணவன்
கழத்தை அறுக்கும்....
காதலில்லா வாழ்க்கை...!
இறைவா
தயவு செய்து
நீ வந்து விடாதே..!
நாளை
இவைஎல்லாம்
அறங்க்கேறலாம்
உனக்குக் கூட....!


எழுதியவர் : ஸ்ரீரங்கம் தமிழ்தாசன் (25-Jan-11, 12:30 pm)
சேர்த்தது : srirangam Tamzhilthasan
பார்வை : 532

மேலே