குடியரசு தினம் !

ஒருநாள் விடுமுறை

தாயின் மணிக்கொடி
தமிழில் ஒத்திகை

முன்னிரவே குடிப்பதற்கு
முண்டியடிக்கும் சேவைகள்

தமிழ் தொலைக்காட்சி
முதன் முதலாய்
தம்மட்டம் அடிக்கும்
புது படத்தோடு
பொருள் கொள்ளை அடிக்கும்
விளம்பரங்கள்

பொடிசுகளின் குத்தாட்டம்
போட்டிவைக்கும் ஒருகூட்டம்

காவல் விருது பெற
ஊழல் பதக்கம் தர
திறமை வேடிக்கையாய்
வறுமையும் வாடிக்கையாய்

பலபடுத்தபட்ட பாதுகாப்பில்
பயன்பெறாத நாள்




எழுதியவர் : . ' .கவி (25-Jan-11, 1:14 pm)
பார்வை : 1833

மேலே