பட்டுபுழுக்கள் கூடுகள்

வெள்ளை புறா பசிக்கு
வீர மரண பிணங்களின்
புழுத்த புழுக்கள் சோறாக

சுதந்திரம் என்பது அதனோடு
சொல்லிக்கொண்டு பறக்கும்
என் மூச்சு போல

பிராணயாமத்தில் பிணவாடை
பிடித்துகொள்ளும் விரலோடு
கைகளோ முத்திரையில்
கனவுகளோ நித்திரையில்
பத்மத்தில் ஆசனம்
பதட்டத்தில் உள்ளொளி

அரசமரம் போதித்ததை
ஆசையின் விடுதலைக்கு
புத்தனின் நன்னெறிகள்
புறப்படுமா யுத்தத்திற்கு






எழுதியவர் : . ' .கவி (24-Jan-11, 5:05 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 320

மேலே