நகர நரக வாழ்க்கை

காலை எழுந்ததும்

வேப்பங்குச்சியை வாயில் வைத்துக்கொண்டே
வயலில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்ததும்

அம்மா கொடுக்கும் பழைய சோறும்
வயலில் பறித்த பச்சை மிளகாயும்

வாயும் கையும் மணமணக்க
வயிற்றுக்குள் செல்ல அப்பப்பா..

அப்படியே புத்தகத்தை எடுத்துக்கொண்டு
பல மைல் தூரம் நடந்துசென்று படித்துவிட்டு

வரும்போதே புத்தகப்பையை போட்டுவிட்டு
குளத்தில் கும்மாளம் போட்டு

சில்லென அடிக்கும் பனியில்
ஆடிக்கொண்டே வீடுவந்து

பக்கத்துவீட்டு செல்லாயி அக்கா
அத்தனையும் அம்மாவிடம் சொல்லிவிட

படவா என்று குச்சியை கையில் எடுத்து
அம்மா துரத்த
அந்த ஊரையே ஒரு சுற்று சுற்றிவந்து அப்பப்பா...

அத்தனையும் விட்டுவிட்டு
இன்று பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்
யாரென்று தெரியாமல் நகர்கிறது
நகரவாழ்க்கை!!!

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (26-Nov-13, 7:36 pm)
பார்வை : 255

மேலே