+எல்லை வீரனின் ஏக்கப்பாட்டு+

குளிரடிக்குதடி குளிரடிக்குதடி
குளிருகாத்து என்னை கொஞ்சம்
உளர வைக்குதடி

பல் நடுங்குதடி படபடக்குதடி
பலமிழந்த வீரன் போல‌
பணிய வைக்குதடி

தூக்கம் சொக்குதடி கண்யிருட்டுதடி
கனவில்கூட பனிபொழிய‌
கலங்க வைக்குதடி

நாட்கள் நீளுதடி பூமிநிக்குதடி
நம்ம ஊரு மாலைக்காத்து
எனை அழைக்குதடி

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Nov-13, 9:47 pm)
பார்வை : 91

மேலே