என் வானில் நீயே

இதழோடு கலந்த வாழ்க்கை
உதிர்ந்து போகக்கூடாது

மடியோடு வாழ்ந்த உறவு
மடிந்து போகக்கூடாது

உணர்வோடு கலந்த உதவி
உடைந்து போகக்கூடாது

விரலோடு கொண்ட பரிசம்
விட்டு போகக்கூடாது

தோளோடு இணைந்த தோழமை
தொலைந்து போகக்கூடாது

உன்னோடு உணர்ந்த கண்ணியம்
இடம் மாறி போகக்கூடாது

மனதோடு கலந்த மயக்கம்
மட்கிப் போகக்கூடாது

இதயத்தோடு சேர்ந்த இதயம்
விலகிப் போகக்கூடாது

என்றுமே என்வானில் நிலவாய்
நீயே வேண்டும்

எழுதியவர் : bhanukl (28-Nov-13, 10:11 am)
Tanglish : en vaanil neeye
பார்வை : 185

மேலே