பின் கதை
முள் உடைத்த
சேலை
கிழியாமல்
எடுக்கப்பட்டது....
முகம் மறந்தவன்
மலையுச்சி
பாறையாகிறான் .....
தேவதையை
பேயாக்கி அலையவிட
கடவுளின் கூட்டணியில்
சாத்தானின் பெருந்திட்டம்....
போதும் என்றாகிய
பொழுது
தலை கோதி சென்றது
இரவாக.......
இன்னும் இருக்கிறது
முள்ளும் சேலையும்
முகமும் காலமும்
கடவுளும் இரவும்
பின்னொரு
கதை கொண்டு.......