ஆரோக்கிய பாரதம்
மழலை ஒன்று
கன்னத்தில் முத்தமிட்டால்
எச்சில்லாயினும்
இன்பம் என்பேன்
இளம் அழகி ஒருத்தி
கன்னத்தில் முத்தமிட வந்தால்
எச்சில் இது வேண்டாம் என்று
விலகி நிற்பேன்
கைகுலுக்கி வரவேற்பது
இரவல் வாங்கிய பழக்கம்
கை கூப்பி வணங்குவதே
ஆரோக்கிய பாரதம் !
----கவின் சாரலன்