பூமியில் தோன்றிய விடிவெள்ளி
எழுமின் விழுமின் என்றே சொன்னீர்
எமக்குள் சக்தி புகவே செய்தீர்....!
இளமை உருவில் இறையென வந்தே எம்
இதயம் முழுதும் நிறைந்திட வாழ்ந்தீர்...!
விழியிலே தீர்க்கமும் மொழியிலே தாக்கமும் நல்
வழியிலே மார்க்கமாய் விடிவெள்ளியே போற்றி..!
ஒளிபட வாழவே நெறிபல கூறியே
ஓயாத கல்வியாய் ஒழுக்கமே போற்றி போற்றி....!!
சகோதர உணர்வை சகாப்தம் ஆக்கியவரே
சரித்திரமாகியும் சந்தோசமாய் வாழ்பவரே....
உணர்வுகளிலே நம்பிக்கையாய்.....
உலகத்திலே ஒளி வடிவாய்......
உள்ளும் புறமும் உமை யாம் கண்டோம்
உண்மையில் எழுச்சி எமக்குள் கொண்டோம்...!
தன்னம்பிக்கை கொண்டே
எமை நாம் வென்றோம்....!