சருகுகள்
சருகுகள் ஆட்டம் போட்டன
கோபுரத்தின் உச்சியில்
அமர்ந்து கொண்டே
இறுமாப்புடன் தலை அசைத்தே
உயரத்தின் உச்சியில்
இருப்பதாக எண்ணி ...!!!
மரங்கள் எல்லாம்
மௌனம் கலைத்தன
கண் இமைக்கும் நேரத்தில்
சருகுகள் எல்லாம்
சகதியில் வீழ்ந்ததன ...!!
பத்தாம் பசலியாய்
பகடை காய்களாய்
மக்கள் இருக்கும்வரைதான்
மகேசன்களின் ஆட்டமும் ....!!!