தந்தை

தோளில் எனைத்தாங்கி
சுமையில்லா சுவை கண்டு
என் அழுகை சத்தம்
உன் இரவை பகலாக்கி
உன் தூக்கத்தை
என் விழிக்கு இரையாக்கி
மாதம் முதல் நாள் சம்பளம்
என் ம௫ந்துக்கும், உணவுக்கும் காசை படையலிட்டு
இன்னல் பல கண்டு
அதில் என் புன்னகை கண்டு
நீ புத்துயிர் பெற்றாய்
என்னை மகனாக்க
நீ கொண்ட துயரம் பல
அதற்கு நன்றி என்று கூட சொல்லாமல் வளர்ந்தவன் நான் .