நமக்கொருவர் இனிமை என்றோம்

நாமிருவர் ஒருவரானோம்
நமக்கொருவர் இனிமை என்றோம் !
கனவின் தொடர்ச்சி போல்
கண்மணி வந்தாள்
உயிர் காற்றைப் போல்
நம் இல்லம் நிறைத்தாள்

வரமாய் வந்தவள் வசந்தம் தந்தாள்
வண்ணத்து பூச்சியாய் சிறகடித்து பறந்தாள்!
படி தாண்டி பள்ளி விடுதிக்கு சென்றாள்
கடல் தாண்டி கணவனுடன் உறைந்தாள் !

வெறுமை நம் வீடு நிறைத்தது
இனிமை நம் இல்லம் விடுத்தது !
ஓசைகளற்று உயிர்த்திருக்கிறோம்
விருப்பேதுமின்றி பசியாறுகிறோம்
இடைவெளி அகன்று இருவராகிறோம் !

முதுமையின் தனிமை பயம் எனை
இப்போதே தின்று தீர்க்கின்றது !!!

எழுதியவர் : thilakavathy (29-Nov-13, 7:59 pm)
பார்வை : 114

மேலே