அன்னை ஓர் இல்லம் முதியோர் இல்லம் 555
தாய்...
கருவேலங்காட்டில்
விறகு எடுத்தாலும்...
மழலையின் அழுகுரல்
கேட்டு ஓடிவருகிறாள்...
கால்களில் முட்கள் தைக்க
எடுக்க நேரமில்லாமல்...
முகத்தில் வழியும்
வியர்வையை துடைக்க...
வினாடி கூட இல்லாமல்
பாலூட்டுகிறாள்...
தாகத்தோடு களை
எடுத்தாலும்...
மழலையின் பசி
அறிந்து பாலூட்டுகிறாள்...
தன்னுடைய
தாகம் மறந்து...
இரவெல்லாம்
கண்விழித்து...
தோலில் தாலாட்டி
மடியில் சீராட்டி உறங்கவைகிறாள்...
இரவெல்லாம் கண்விழித்து
உன்னை ரசித்த அவளுக்கு...
நீ தரும் சன்மானம் என்று
தருவாயா அவமானம்...
முதியோர் இல்லம்...
தினம் தினம் வழிமீது
விழி வைத்து காத்திருக்கிறாள்...
பேரகுழந்தைகளோடு
மகன் வருவான் என்று...
நாளை முதியோர் இல்லத்தில்
இடம் உனக்கு மறந்துவிடாதே...
இனியேனும்
திருந்திவிடு...
உன் வீட்டில் ஓர் இடம்
கொடு அவர்களுக்கு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
