இதுதான் விதி செய்த சதியோ
முகப்புத்தக பூங்காவில்
நண்பராய் அறிமுகமாகி
பின் புரிந்துணர்வால்
இணைபிரியா காதலராகி....
நிலவே சாட்சியாய்
காதல் வானில்
இன்பமாய் சிறகடித்து
உல்லாசமாய்ப் பறந்தவர்கள்...
இன்று சாதியெனும்
தீராத பிரச்சினையால்
பெற்றோரின் தலையீட்டில்
ஆளுக்கொரு திசையில் .....!!!!
---------------------------------------------