புது வாழ்வு
எதுவும் செய்யலாம் என்ற போது
எதுவும் செய்ய முடியவில்லை
ஏதுவும் செய்ய முடியும் என்ற போது
எதுவும் இல்லை செய்வதற்கு
என்ன வாழ்க்கையோ தெரியவில்லை
என்று சலித்துக் கொண்டே வாழ்கிற போது
சட்டென்று ஒரு பிடிமானம் தென்பட்டது
என்ன என்று குறுகுறுக்கும் மனத்திற்கு
விடையாக ஒரு பச்சிளங் குழந்தை
அழ முடியாமல் அழுது கொண்டு கிடந்தது
அதை தூக்கி எடுத்துக் கொஞ்சினவுடன்
நெஞ்சில் இருந்த சலனம் பறந்து ஓடியது
மனது துள்ளிக் குதிக்க எண்ணங்கள் விரைந்து ஓட
என்னால் எல்லாம் முடியும் என்ற நினைப்போடு
புது வாழ்வை தொடங்க ஆவலாய் உள்ளாள் நிஜந்தா.