என் மொழி

மொழிகளில் எல்லாம்
மூத்த மொழி - என் மொழி
திராவிடர்களின் அடையாளமே
என் மொழி!!

தமிழ் என்ற
ஒற்றை வார்த்தையில்
விளையாடுகிறது
வல்லினம் என்னும் த
மெல்லினம் என்னும் மி
இடையினம் என்னும் ழ்

இயல், இசை மற்றும்
நாடகம் கொண்டு எங்களை
இன்ப வெள்ளத்தில்
மூழ்கடித்தவள் என் தமிழ்மொழி

அறம், பொருள் மற்றும்
இன்பத்தைக் கொண்டு
எங்கள் வாழ்க்கையை
வரையறுத்த மொழி - எம்மொழி

ஆரரைக்கோடி இதயங்களின்
துடிப்பே எம் மொழி

கல் தோன்றா, மண் தோன்றா
காலத்தே முன் தோன்றிய
மூத்த மொழியாம் எம்மொழி

பல தலைமுறைகளைக்
கடந்து
பண்பாடுகளை
சுமந்து
கலாச்சாரங்களை
கடைபிடித்து
கம்பன் , தொல்காப்பியன்,
இளங்கோ , வள்ளுவன் மற்றும்
பாரதி கண்ட பண்பட்ட
மொழியன்றோ எம்மொழி!!!

எங்களை ஆங்கிலேர்கள்
ஆண்ட போதிலும்
கலபிரர்கள் எங்களுடன்
கலந்த போதிலும்
முகலாயர்கள் எங்களை
மூழ்கடித்த போதிலும்
மூச்சு பிடித்து முண்டி
எழுந்த மொழிதான் எம்மொழி!!

என்மொழி ஈன்ரெடுத்த
புதல்வர்கள் மட்டுமே
247 .

ஒவ்வொரு எழுத்திற்கும்
உயிருண்டு ,உணர்வுண்டு,
மதியுண்டு, மணமுண்டு
வீரத்தின் விதைதான் – எம்மொழி

எழுதியவர் : ராமசந்திரன் J (30-Nov-13, 11:19 pm)
Tanglish : en mozhi
பார்வை : 132

மேலே