ஏக்கத்தின் எல்லை
ஏக்கத்தின் எல்லை உடையும் ,
கோபமும் சீற்றமும் வான்தோய் உயர்ந்து நிற்கும் ..
சிந்தை கலங்கும்
வெறுப்பும் வெறுமையும் மிஞ்சும் ..
உற்றார் உறவினர் புரியும், தெரியாது ...
உடல் சார்ந்ததோ மனம் சார்ந்ததோ ..
உடலும் மனமும் சேர்ந்த "நான்" சார்ந்தது ..
தேவையோ ஆசையோ ..
ஆனால் தகுதி உடையவள் ...
என் வானில் நான் பறக்க எத்தனை தடைகள்,
சோதனைகள் !
பறக்க வேண்டும் என் வானில் என் சிறகுகளுடன்...
இயற்கை..