காதல் யுத்தகளம்
காதல் யுத்தகளம் : நான்
ஒற்றன் - கண்கள்
தளபதி - மூளை
மந்திரி - காதல் ஹார்மோன்கள் -ஆக்சிடோக்ஸின்
எதிரி நாட்டுத் தலைவன் : காதல் அணுக்கள்
எதிரிகள்(ஹார்மோன்கள்) : டெச்டொச்டீரோன்
ஓஸ்ட்டுரோஜென்
போர்வீரர்கள்(சிப்பாய்கள்) - வெள்ளையணு, சிவப்பணு, தட்டையணு
----------------------------------------------------------
காதல் அணுக்கள்
டெச்டொச்டீரோன்
ஓஸ்ட்டுரோஜென்
கொண்டு
ஒற்றன் கண்களை
வசியப்படுத்தி
கட்டளையிட்டதின் விளைவு
சதியாலோசனை அரங்கேற்றம்
பங்குகொண்ட
கூட்டுக்கள்வர்கள்
ஒற்றன் கண்கள்
மந்திரி ஆக்சிடோக்ஸின்
மற்றும் காதல் அணுக்கள்
கள்வர்கள்
இதயத்தின்
வாசலைத் திறக்க
ஒருவரும் அறியாமல்
ஊடுருவின
புற்றீசலாய்
காதல் அணுக்கள்
புற்றீசல் பரந்து
தலைநகரமாம் தலையை
சடுதியில் அடைந்தது
சதியின்
முதல்படியாய்
தளபதி மூளையை
வசியப்படுத்த
வெடித்தது
பெரும் பிரளயம்
போர் முரசு கொட்ட
புரட்சி புயலாய்
வெடிக்குமென
நான் நினைக்க
அந்தோ பரிதாபம் !
சீறிப் பாயவேண்டிய
எனது வெள்ளைச் சிப்பாய்கள்
வெட்கத்தில் !
குருதி சிந்தி
காக்கும் சிவப்புச் சிப்பாய்கள்
சத்யாக்ரகத்தில் !
வெட்கக்கேடு
காதல் அணுக்கள்
தலை முதல் பாதம் வரை
பரவி ஆட்சி பீடத்தை
கையில் கொண்டுவிடுமோ
விபரீதம் உணர்ந்து
நான் நடவடிக்கை
எடுக்குமுன்னே
அதன் பயனற்ற
தன்மையை
தளபதி மதுவுண்ட
கள்வனைப்போல் உறங்க
மனம் மயக்கத்தில்
வாய் காதலை உச்சரிக்கக்
காண உணர்ந்தேன்
சின்ன ஆறுதலாய்
தட்டையணுக்கள் மட்டும்
விசுவாசமாய் வேலை செய்ய
குருதிச் சேதமின்றி
இறுதியில் காதல்
யுத்தகளத்தில்
அடிமையானேன்
நான் அடிமையானேன்
காதல் புற்றுநோய்க்கு !!!